இந்தியாவில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவார். இந்த நிலையில் 18 வயது நிறைவடைவதற்கு முன்பாகவே தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ளும் முறையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இதற்கு பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு 17 வயது பூர்த்தியானவுடன் பதிவு செய்வதால் 18 வயது ஆன முதல் நாளிலேயே வாக்காளர் ஆகிவிடலாம். இதில் கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக பதினெட்டாவது பிறந்தநாளில் வாக்காளர் அட்டை வீட்டிற்கு பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
Categories