Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆடுகளை ஆட்சியர் அலுவலகத்தில் விட்டு சென்ற விவசாயி”…. தேனியில் பரபரப்பு…!!!!!

நில பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடுகளை விவசாயி விட்டுச் சென்றார்.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் காலியாக இருக்கும் இடத்தில் இன்று பகலில் இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடுகள் மாலை வரை அங்கேயே இருந்தது. உரிமையாளர் யாரும் வந்து அழைத்துச் செல்லவில்லை. இதனால் தகவல் அறிந்து வந்த போலீசார் ஆடுகளை பார்வையிட்டு உரிமையாளர் யார் என விசாரணை மேற்கொண்டார்கள்.

போலீசார் விசாரணையில் ராயப்பன்பட்டி அருகே இருக்கும் அணைபட்டியை சேர்ந்த விவசாயி தென்னரசு என்பவர் தன்னுடைய நிலப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஆடுகளை ஆட்சியர் அலுவலகத்தில் விட்டு சென்றது தெரிந்தது.

மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்டுக்குட்டிகளுடன் மனு கொடுக்க வந்து மனுவை கொடுத்துவிட்டு ஆட்டுக்குட்டிகளை அங்கேயே விட்டுச்சென்றது தெரிந்தது. இதனால் விவசாயிடம் தொடர்பு கொண்டு ஆடுகளை அழைத்துச் செல்லுமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டார். இதனால் போலீசார் இரவு 9 மணி அளவில் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை கட்டிடத்தில் ஆட்டுக்குட்டிகளை அடைத்தார்கள்.

Categories

Tech |