தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கலைஞருடைய ரத்தத்தால் உருவாக்கப்பட்டது தான் திராவிட கழகத்தினுடைய கொடி என்பதை வரலாற்றிலே இன்றைக்கு பதிவாகி இருக்கிறது.
அதுதான் திராவிட கழகத்தினுடைய கொடியாகவும் அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் இன்றைக்கு கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்நாளில் இந்த மண்ணில், இந்த இடத்தில் நம்முடைய தலைவர் கலைஞர் அவருடைய சிலையை திறந்து வைப்பதிலே, என்னுடைய வாழ்நாளில் எனக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமையாக நான் கருதுகிறேன்.
அவரை போல் பேச முடியாது, எழுத முடியாது, உழைக்க முடியாது என்று சொன்னாலும், அவர் நினைத்திருக்கக்கூடிய காரியங்களில் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டுதான் இன்றைக்கு நான் ஆறாவது முறையாக தமிழகத்தில் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கிறது. இப்போதெல்லாம் உருவாகிற கட்சிகள், தொடங்கப்படக்கூடிய கட்சிகள்,
தொடங்கிய உடனே அடுத்த நான் தான் ஆட்சி, அடுத்த நான் தான் முதலமைச்சர், கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, நான்தான் முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டிருக்க கூடிய சில அரசியல்வாதிகள் எல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.