Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அபாய கட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை”…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!!!!!

கடலூர் அரசு மருத்துவமனையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் உள்ள நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். பல வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்பொழுது முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதம் அடைந்து இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக முதல் தளத்தில் இருக்கும் அனைத்து அறைகளின் சிமெண்ட் காரைகளும் அவ்வபோது பெயர்ந்து விழுகின்றது. இதில் ஒரு அறை முழுவதும் இருக்கும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பி வெளியே தெரிகின்றது. மேலும் வராண்டா மற்றும் படிக்கட்டுகளில் மேற்பகுதியில் இருக்கும் சிமெண்ட் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் டாக்டர்கள், பணியாளர்கள், நோயாளிகள் என அனைவரும் அச்சத்துடன் வந்து செல்கின்றார்கள்.

இது பற்றி பலமுறை புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவோ அல்லது அதனை சீரமைக்கவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |