ரஷ்யாவின் இளம் பத்திரிக்கையாளரும், அரசியல் ஆர்வலருமான டாரியா டுகினா மாஸ்கோவில் தனது காரில் பயணித்தபோது வெடிகுண்டு வெடித்து உயிரிழந்துள்ளர்
அப்பாவியான ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக போப் பிரான்ஸிஸ் கூறியவதால், அவர் உக்ரைனின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டாரியா டுகினா கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் பல்வேறு ஊடகவியலாளர் அமைப்புகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மேலும் டாரியா டுகினாவின் மரணம் குறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது, “இது ஒரு படுகொலை என்றும், அப்பாவியான ரஷ்ய பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் அவர், அவர்கள் உக்ரேனியர்களாக இருந்தாலும் சரி, ரஷ்யர்களாக இருந்தாலும் சரி…போர் எனும் பைத்தியக்காரத்தனத்திற்கு பல அப்பாவிகள் தங்கள் உயிரை விலையாக கொடுக்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் உலகின் முக்கிய மதத் தலைவரான போப்பின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு பதில் அளித்த உக்ரேனின் வாட்டிகன் தூதர் ஆன்ட்ரி யுரேஷ், போப்பின் பேச்சு ஏமாற்றம் அளித்தது மற்றும் பல விடயங்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. ரஷ்யர்களால் தான் அவர் கொல்லப்பட்டார். டுகினா ஒன்றும் அப்பாவி அல்ல என கூறினார். இந்நிலையில் கொல்லப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் டுகினாவை அப்பாவி என்று கூறியதால் உக்ரைனின் கோபத்திற்கு போப் பிரான்சிஸ் கூட பாதுகாப்பாக இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.