அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்வடமலாபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளாத்திகுளத்தில் ஊர்காவல்படை வீரராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் அயன்வடமலாபுரம் கிராமத்திலிருந்து வீரப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரசு பேருந்து ஒன்று செல்வகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த எட்டயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அரசு பேருந்து டிரைவரான மூப்பன்பட்டி பகுதியில் வசிக்கும் லெட்சுமண பெருமாள் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.