Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வரிப்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்” போலியான செயலியால் ரூ. 14 லட்சத்தை இழந்த ஊழியர்….. பெரும் பரபரப்பு….!!!!

ஓய்வு பெற்ற ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பொதுமக்கள் வரை செல்போன் பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடானது அதிகரித்துள்ளது. இந்த செல்போன் பயன்பாட்டினால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைத்தாலும் அதில் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் அதிகரித்துவிட்டது. இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் பொதுமக்களுக்கு சுலபமாக இருந்தாலும், அதில் மோசடிகளும் நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல செய்திகள் சமீப காலமாகவே வந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த இருளப்பன் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கு நிர்வாக ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் 15 வருடங்களாக வருமான வரி தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் இருளப்பனின் செல்போன் நம்பருக்கு கடந்த வருடம் செலுத்திய வரிப்பணத்தை திரும்ப பெறுமாறு கூறி ஒரு மெசேஜ் வந்துள்ளது. இந்த மெசேஜை கிளிக் செய்த போது வருமானவரித்துறை போன்ற ஒரு போலியான இணையதள முகவரி ஓபன் ஆகியுள்ளது. அதில் இருளப்பன் தன்னுடைய பான் கார்டு, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில் இருந்த செயலியை இருளப்பன் பதிவிறக்கம்  செய்துள்ளார். இதனையடுத்து இருளப்பன் பேருந்து டிக்கெட்டை இணையதளம் மூலியமாக செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வந்ததால் அதிர்ச்சி அடைந்த இருளப்பன் வங்கியில் சென்று பார்த்துள்ளார். அப்போது வங்கிக் கணக்கில் இருந்த ரூ 14.50 லட்சம் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து இருளப்பன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |