Categories
தேசிய செய்திகள்

செம குஷியில் தாத்தா, பாட்டி….. இந்த பேருந்துகளில் இலவசம் இலவசம்….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டில் ஒவ்வொரு மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் மூத்த குடிமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் 75 வயது அடைந்த மூத்த குடிமக்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை துணை மேலாளர் கூறுகையில், மூத்த குடிமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யும் விதமாக அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆகஸ்ட் 26க்கு பிறகு வெளியூர் செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தங்களுடைய பணத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசமாகவும் 65 முதல் 75 வயது உடையவர்கள் 50 சதவீதம் கட்டணத்திலும் பயணம் செய்யலாம். முதியோர் கட்டணத்தில் இலவசமாகவோ பாதி கட்டணத்தில் பயணம் செய்வதற்கோ விரும்புவர்கள் தங்களுடைய ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை உடன் வைத்திருக்க வேண்டும். இந்த பயணத்திட்டம் நகரப் பேருந்துகளில் பொருந்தாது. மாநிலம் முழுவதும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே பொருந்தும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |