Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ? முழு அலசல்

கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் துறைவாரியாக தமிழக அரசு ஒதுக்கிடுள்ள நிதி குறித்து கூறுகையில் ,

தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ 74 கோடி ஒதுக்கீடு

காவல்துறைக்கு ரூ 8,876 கோடி ஒதுக்கீடு

சிறைச்சாலை துறைக்கு ரூ 392 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்திற்கு ரூ 1,403 கோடி ஒதுக்கீடு

உளவுத்துறைக்கு ரூ 6,500 கோடி ஒதுக்கீடு

கால்நடைத்துறைக்கு ரூ 199 கோடி ஒதுக்கீடு

மீன்வளத்துறைக்கு ரூ 1,229 கோடி ஒதுக்கீடு

நீர் பாசனத்திற்காக ரூ 6,991 கோடி ஒதுக்கீடு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ 5,306 கோடி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ 34,181 கோடி

உயர்கல்வித்துறைக்கு ரூ 5,052 கோடி ஒதுக்கீடு

சுகாதாரத்துறைக்கு ரூ 5,863 கோடிஒதுக்கீடு

தொழிலாளர் நலன் துறைக்கு ரூ 200 கோடி ஒதுக்கீடு

தொழில்துறைக்கு ரூ 2,500 கோடி ஒதுக்கீடு

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ 153 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

Categories

Tech |