மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒர்க்ஷாப் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேரகுளத்தில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து விட்டு கடைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சிரியந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த காளிதாசை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சேரகுளம் காவல்துறையினர் லாரி டிரைவரான தாழையூத்து பகுதியில் வசிக்கும் நல்லையா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.