டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் மகாராஜன் என்பவர் டிராக்டர் மூலம் டேங்கில் இருந்து தண்ணீர் பிடித்து குளத்தில் இருந்து வெளியே ஓட்டி வந்துள்ளார்.
அப்போது அந்த டிராக்டர் மேல் கவின், விஷ்ணு, காளிராஜ், கார்த்திக், கவுதம் ஆகிய 5 சிறுவர்கள் உட்கார்ந்து இருந்தனர். இந்நிலையில் கவுதம் திடீரென டிராக்டரிலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.