Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : ரூ 281,00,00,000 இந்து அறநிலைத்துறைக்கு ஒதுக்கீடு …!!

தமிழக பட்ஜெட்டில் இந்து சமய அறநிலைத்துறைக்கு ரூ 281 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்து சமய அறநிலைத்துறைக்கு ரூ 281 கோடி

கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க ரூ 11,000 கோடி ஒதுக்கீடு

அம்மா உணவகத்திற்க்காக ரூ 100 கோடி

விழுப்புரம் – அழகான்குப்பம் , செங்கல்பட்டு – ஆலம்பாறை , நாகப்பட்டினம் – ஆறுகாட்டுத்துறையில் புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடி அருகே பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆளை மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகம் ரூ 49,000 கோடி செலவில் அமைக்கப்படும்.

கிழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த , உலகத்தரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகம் ரூ 12.21 கோடியில் அமைக்கப்படும்.

 

Categories

Tech |