ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 185 வது நாளை தொட்டு இருக்கும். இந்நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல் ஜபோரிஜியாவிலும், உக்ரைனின் தெற்கு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இது குறித்து நாட்டின் விமானப் போக்குவரத்து தினத்தில் பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியதாவது, “ரஷ்ய படைகள் உக்ரைனை விட்டு வெளியேறும் நாள் விரைவில் வரும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய வீரர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் திறனை படிப்படியாக அழிப்பார்கள், அத்துடன் எதிரிகள் ஜபோரிஜியாவிலும், தெற்கிலும், நாட்டின் கிழக்கிலும், கிரிமியாவிலும் இறக்கும் நாள் விரைவில் வரும் என தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் எங்கள் வீரர்களின் பாதுகாப்பு சூரியன் போல் இருக்கும் என்றும், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் பனி போல இறந்துவிடுவார்கள்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.