Categories
தேசிய செய்திகள்

இனி ஆன்லைன் மூலம் ஈஸியா டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

எந்த ஒரு வாகனத்தை ஓட்ட வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயம் ஓட்டுநர் உரிமம் அவசியம் . அவ்வாறு ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் வாகன போட்டிகள் அபராதம் செலுத்த நேரிடும். ஓட்டுனர் உரிமத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு சில காரணங்களால் எப்போதாவது ஓட்டுநர் உரிமம் தொலைந்து விடும். அப்படி தொலைந்து விட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் சில நிமிடங்களில் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் நீங்கள் வாங்கிவிடலாம். அதற்கு எளிதில் ஆன்லைன் மூலமாகவே வேலையை முடிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

படிவம்-2 (LLD)
அசல் உரிமத்தின் நகல்

FIR நகல்

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

வயதுச் சான்று

முகவரிச் சான்று

அதற்கு முதலில் https://parivahan.gov.in/என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் ஓட்டுனர் உரிமம் தொடர்பான சேவைகளுக்கு ஆன்லைன் சர்வீஸ் என்பதை தேர்ந்தெடுத்து மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு மற்றொரு பக்கம் திறந்தவுடன் அதில் டிரைவிங் லைசென்ஸ் என்பதற்கு சென்று service on DL என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து கண்டினியூ என்பதை கிளிக் செய்து ஓட்டுனர் உரிமம் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு get dl details and select your driving license என்பதை கிளிக் செய்து உங்களின் ஓட்டுனர் உரிமத்தை தேர்ந்தெடுத்து கண்டினியூ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு உங்களின் மாநிலத்தின் பெயர் மற்றும் RTO தேர்ந்தெடுக்கப்படும்.

அதில் உங்களின் ஓட்டுனர் உரிம விபரங்கள் காண்பிக்கப்படும். அனைத்து தகவல்களும் சரியாக இருந்தால் கன்ஃபார்ம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்த பக்கத்தில் problem of fake DLஎன்பதை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் நீங்கள் ஏன் போலி ஓட்டுநர் உரிமம் கேட்கிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.

அதில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் ஒப்புதலை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும்.

தற்போது நீங்கள் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் நிரப்பப்பட்ட விண்ணப்பம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஆர்டிஓ அலுவலகத்தை பார்வையிட வேண்டும்

Categories

Tech |