தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு மயிலாடுதுறையை சேர்ந்து ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவின் குடும்பமே இதில் முழு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், அவருடைய தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் இதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த வேகத்தில் சென்றால் அடுத்த ஆண்டு சிம்புவுக் திருமணம் ஆகிவிடும் போல.