மாணவ,மாணவிகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்ல தனியார் பள்ளிநிர்வாகங்கள் சார்பாக வாகன வசதியானது செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்கவும், நல்ல செயல்திறனுடன் இருக்கிறதா.? என்பதை கண்டறியவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பிறகே தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிவாகனங்களுக்குள் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளிவாகனங்களில் டிரைவர் இருக்கைக்கு முன்புறமும், குழந்தைகள் தெரியும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது ” கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளில் 67 தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இப்பள்ளிகள் சார்பாக 350 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதை இயக்குவதற்கு தகுதியான வாகனங்களை மட்டும் குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அத்துடன் பள்ளிகுழந்தைகள் வாகனங்களில் நின்றுகொண்டே செல்கிறார்களா..? உட்பட அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கேமராக்களானது பொருத்தப்பட்டுள்ளது.
அதாவது 12 இருக்கைகள் இருந்தால் ஒரு கேமராவும், அதற்கு மேல் இருந்தால் கூடுதலாக கேமராக்களும் பொருத்தப்பட வேண்டும். இதனிடையில் கேமராவின் செயல்பாடு தொடர்பாக பள்ளிநிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொள்ளும் அடிப்படையில் வசதியானது கொடுக்கப்பட்டிருக்கும். பள்ளி வாகனங்கள் எப்.சி-க்கு வரும்போது கண்காணிப்பு கேமரா செயல்படுகிறதா..? என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு கேமரா செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே எப்.சி. தகுதிசான்று வழங்கப்படும். இதனை தவிர்த்து ஆய்வு மேற்கொள்ளப்படும்போது கேமரா, ஜிபிஆர்எஸ் வசதி பயன்பாட்டில் இருக்கிறதா என கண்காணிக்கப்படும்.
மேலும் கல்வித் துறை அதிகாரிகளும் தனியார்பள்ளிகளுக்கு போகும் நேரத்தில் வாகனங்களை ஆய்வு மேற்கோள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிபிஆர்எஸ் வசதி வாயிலாக பள்ளி வாகனம் எங்கு வருகிறது. அத்துடன் எவ்வளவு நேரத்தில் வரும் உள்ளிட்ட தகவல்களை குழந்தைகளின் பெற்றோர் தெரிந்துகொள்ள முடியும். இதற்குரிய வசதியை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்திகொடுக்க வேண்டும். வாகனங்களை இயக்கும்போது, பின்னால் குழந்தைகள் நிற்கிறார்களா..? என்பதை பார்த்து கொள்ள வேண்டும். மாதம் ஒருமுறை பள்ளி நிர்வாகம் டிரைவர்களிடம் வாகனத்தின் செயல்பாடு தொடர்பாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி டிரைவர்களின் செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள்.