Categories
உலக செய்திகள்

பெண்ணுடன் வாக்குவாதம்…. தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள்…. குதித்த நபர் பலி….!!

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் பாலத்திலிருந்து தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள் குதித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா நாட்டில் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் தென்மேற்கு லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பாலத்தில் வாய் தகராறில் ஆணும் பெண்ணும் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திருட்டு குற்றச்சாட்டுக்கு பிறகு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்ய முற்பட்டனர்.

ஆனால் அந்த நபர் திடீரென கிங்ஸ்டன் பாலத்திலிருந்து தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள் குதித்தார். இதனை தொடர்ந்து தீயணைப்புப் படை, ஆர்என்எல்ஐ, பெருநகர காவல்துறையின் கடல் பிரிவு மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் உதவுடன் தேடுதல் வேட்டை நடத்திய பின்னர் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடல் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, துணை மருத்துவர்கள் அவரை உயிர்ப்பிக்க முயன்றனர், ஆனால் இறுதியில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். பெயர் வெளியிடப்படாத 20 வயதிற்குட்பட்ட அந்த நபரை கைது செய்யப்படும் போது கைவிலங்கில் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து துணை உதவி ஆணையர் லாரன்ஸ் டெய்லர் கூறியதாவது, “எனது எண்ணங்களும், பெருநகர காவல் துறையின் எண்ணங்களும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பரிதாபமாக உயிரிழந்த நபரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உள்ளன” என   அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |