உத்திரபிரதேசம் மாநிலத்தின் மலக்குர் என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் 18 மாத ஆண் குழந்தையை திடீரென காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு குழந்தையின் உடல் பாகங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனே தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. ரமேஷ் குமாரின் சகோதரருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் உயிரிழந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சகோதரரின் மனைவி சரோஜா தேவி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இந்த குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என நினைத்து இந்த தம்பதியினர் சாமியார் ஒருவரை சந்தித்துள்ளனர். அந்த சாமியார் குழந்தை ஒன்றை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தனது தம்பியின் மகன் குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.இந்த கொடூர சம்பவத்தை எடுத்து போலீசார் சரோஜாதேவி அவரது கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.