Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இதை விற்பனை செய்யக் கூடாது”…. கடுமையாக எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!!!

பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக திகழ்கின்றது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல் மாசடைகின்றது. அதனால் கடைகளில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தடை செய்திருக்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பல்வேறு விதமான விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றார்கள். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு தடை செய்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு அவ்வபோது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று நகர்நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் மேற்க்கு ரத வீதி தாலுகா, அலுவலக சாலை, பழனி சாலை போன்ற பகுதிகளில் 20 ற்கும் மேற்பட்ட கடைகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஒரு மொத்த விற்பனை கடையின் குடோனிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது கடைகள் குடோனில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பிளாஸ்டிக், டம்ளர், தட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து கடைகள் குடோனில் இருந்த 300 கிலோ பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர், தட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |