Categories
தேசிய செய்திகள்

இப்படியெல்லாமா செய்வாங்க….. கட்டை விரல் தோலை உரித்து….. வெளியான பகீர் சம்பவம்….!!!!

இந்திய இரயில்வே சார்பில் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் தேர்வு ஒன்றை நடத்தி வந்தது. இந்த தேர்வில் பல்வேறு மாணவர்கள் தேர்வு எழுத வந்தனர். குஜராத்தில் நடைபெற்ற இந்த தேர்வுக்கு, டிசிஎஸ் ஊழியர் அகிலேந்திர சிங் என்பவர் தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தேர்வு நடந்த நாளில் தேர்வு எழுத வந்த தேர்வாளர்களுக்கு கை ரேகை ஸ்கேனிங் நடைபெற்றது. இதில் மனீஷ்குமார் சம்பு பிரசாத் என்பவர் கை ரேகை பதிவு செய்தபோது, அது தவறு என்று வந்தது. இதனால் முதலில் அந்த மிஷினில் கோளாறு என்று எண்ணிய கண்காணிப்பாளர், அதனை மற்றவருக்கு சோதனை செய்தார். ஆனால் அவர்களுக்கு சரியாக வரவே, மனீஷ்குமார் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் அவரது கை விரல்களை சோதனை செய்தபோது, அவரது கட்டை விரலில் தோல் ஒட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கையும்களவுமாக பிடிபட்ட மனீஷை கண்காணிப்பாளர்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், மனீஷ், ராஜ்யகுரு குப்தா என்பவருக்கு பதிலாக தேர்வு எழுத வந்ததை ஒப்புக்கொண்டார். ற்போது ஆள்மாறாட்டம் செய்த மனீஷ் மற்றும் ராஜ்யகுரு குப்தா மீது ஐபிசி 419, 464, 465, 468 மற்றும் 120(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உண்மையாக தேர்வு எழுதவேண்டியவரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

Categories

Tech |