Categories
தேசிய செய்திகள்

பிக்சட் டெபாசிட்டில் முதியர்வர்களுக்கான பயன்கள்…. என்னென்ன இருக்கு தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!

அதிகளவிலான மக்கள் தங்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைக்கின்றனர். சில பேர் அதிகமான வட்டியை எதிர்பார்க்கின்றனர். நிலையான வைப்புநிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது. வங்கிகள் தங்கள் திட்டங்களுக்குரிய காலஅளவு முதல் சில வரைமுறைகளையும் வகுத்து இருக்கின்றனர். இதில் மக்களுக்கு எவை வசதியாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது குறிப்பிட்ட வங்கி வைப்புநிதி கணக்குகளுக்கு புது வட்டியை நிர்ணயித்துள்ளது.

அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு சீனியர்சிட்டிசன் என்ற அடிப்படையில் கூடுதலான சலுகைகளுடன் அதிகமான வட்டியை வழங்குகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு வங்கி நிலையான வைப்புத் தொகைகள் (FDகள்) நீண்டகால அடிப்படையில் சிறந்த முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். இதற்கிடையில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்டில் 8 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வட்டிவிகிதம் வழங்கும் வங்கிகளின் விபரங்களை பற்றி கீழே அறிந்து கொள்ளலாம்.

பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி வயது முதிர்ந்தவர்களுக்கு பிக்சட் டெபாசிட்டுக்கு 1000 நாட்களுக்கு 8 சதவீத வட்டியை வழங்குகிறது.

ஜனாஸ்மால் பைனான்ஸ் வங்கி

ஜனாஸ்மால் பைனான்ஸ் வங்கி வயது முதிர்ந்தோருக்கு பிக்சட் டெபாசிட்டுக்கு 7 தினங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்டுக்கு 8.15 சதவீத வட்டி வழங்குகிறது.

சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 999 தினங்களுக்கு 7.99 சதவீத வட்டி வழங்குகிறது.

Categories

Tech |