டெல்லி ஷாலிமார் பாக்கில் அம்பேத்கர் நகர் பகுதியில் ரின்கு ஜிண்டால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாந்த் விகார் பகுதியில் வங்கி கொலை ஈடுபட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட பிறகு அதே ஆண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜிண்டாலுக்கு வருவாய் எது இல்லாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போனார். அதற்கு அடிமையான அவர் பணம் தேவை என்பதற்காக பழைய தொழிலுக்கு திரும்பி உள்ளார். அதன்படி கைகுட்டையால் முகமூடி போன்று அணிந்து கொண்டு நகைக்கடை ஒன்றில் புகுந்துள்ளார். கடை உரிமையாளர், பணியாளர்கள் அனைவரும் கடையில் இருந்தபோது துப்பாக்கி முனையில் 10 தங்க சங்கிலிகள் மற்றும் ரூ.20,000 பணம் வாங்கி ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து உரிமையாளர் அனுராக் கார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவரது இடது கையில் பிளாஸ்டிக் பை ஒன்றும், வலது கையில் துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது. இருப்பினும் ரிக்சாவில் எறிப்போனார். போக்குவரத்து நெரிசலில் அடையாளம் காண முடியாத தப்பிச் சென்று விட்டார். அதன் பிறகு உளவு தகவல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஒரு வார காலம் தொடர் முயற்சியின் பயனாக, கடந்த 25ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 76 கிராம் கொண்ட ஒரு செயினை அடகு வைத்து ரூ.2.6 லட்சம் பெற்று உள்ளார். அவற்றில் 1.5 லட்சம் தொகையை ஆன்லைன் விளையாட்டில் இழந்து உள்ளார். மீதமுள்ள தொகையை போலீசார் கைப்பற்றினர். சம்பவத்தன்று ஜிண்டால் அணிந்திருந்த ஆடைகள், காலணிகள் மற்றும் பொம்மை துப்பாக்கி ஆகியவை சோதனையில் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.