இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக கோடிக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றன. இதனை தவிர்த்து மாநில மற்றும் மத்திய அரசு வாயிலாக வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இந்த ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மக்கள் வசதிக்காக பல்வேறு புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாடு முழுதும் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் ஊழல்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகிறது. இதனை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதனை தவிர மக்கள் வீட்டில் இருந்தே ரேஷன் கடைகள் திறப்பு மற்றும் உணவு பொருட்களின் இருப்பு நிலை தொடர்பாக தெரிந்துகொள்ளும் விதமாக புது ஆன்லைன் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதன் வாயிலாக மக்கள் ரேஷன் பொருட்களை எளிதாக பெறமுடியும். இந்தியாவில் சென்ற சில வருடங்களுக்கு முன் கொரோனா காரணமாக நாடு முழுதும் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ கோதுமை, அரிசி கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டது. அதன்பின் தற்போது உத்திரபிரதேச மாநில அரசு செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதத்திற்கு பின் கோதுமை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய்க்கும், அரிசிக்கு 3 ரூபாய்க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.