ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அ.தி.மு.க-வில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோர் பெட்டிப் பெட்டியாக பணம் வைத்திருக்கின்றனர். அவர்களிடம் கோடிக் கணக்கில் பணம் குவிந்து கிடக்கிறது. இதற்கிடையில் அவர்கள் பணத்தை வைத்து ஆள்பிடிக்கும் வேலையை செய்து வருகின்றனர். ஆகவே பணம் பாதாளம் வரையிலும் பாய்கிறது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள் அணி மாறுவதால் அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏற்படாது. ஆஸ்கரையே ஓ.பன்னீர் செல்வத்தின் நடிப்பு மிஞ்சிவிடும். அரசியலை விட்டு நடிப்புக்கு வந்து இருந்தால் ரஜினி, சிவாஜியையே ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்திருப்பார் என விமர்சித்தார். அதுமட்டுமின்றி கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது என்ற பழமொழியை சுட்டிக் காட்டி, அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் போன்றோருக்கு இடமில்லை” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.