உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் எமரால்ட் கோர்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் சட்டவிரதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த இரு கட்டிடங்களையும் இடித்து தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பு வளகங்களானது இன்று பிற்பகல் 2:30 மணிக்கு வெடிவைத்து தரமாக்கப்படவுள்ளது. இதற்காக 3700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை முதலே கட்டடம் அமைந்துள்ள பகுதி அருகில் பொதுமக்கள் குவிந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர். மேலும் சிலர் புகைப்படங்களை எடுக்க அப்பகுதிக்கு செல்கின்றனர். இதனால் கட்டிடத்தின் முன்பு அதிக அளவிலான பொதுமக்கள் குவிந்து வருவதால் காவல்துறையின் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி மக்களை அப்புறப்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் போக்குவரத்து காவலர்களும் தடுப்புகளை அமைத்து வாகனங்கள் வராத வகையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிராக கட்டப்பட்ட இதுபோன்று 2020 ஆம் ஆண்டு காலத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிட்டுத்தக்கது.