Categories
மாநில செய்திகள்

இது வேற லெவல்…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது. மத்திய அரசு தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த பொதுமக்கள் வெளி மாநில நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் தகுதி அற்றவர்களும் நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்வதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக நியாய விலை கடைகளில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

ஏற்கனவே நியாய விலை கடைகளில் கைரேகையை ஸ்கேன் செய்தால் தான் பொருட்கள் கிடைக்கும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இனி கண் விழி ஸ்கேன் செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதை தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளுக்கு சொந்தமாக கட்டிடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பற்ற முறையில் கிடக்கும் நியாய விலை கடைகளுக்கு வண்ணம் பூசவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நியாய விலை கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை என்ற திட்டத்தை கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் படி தன்னார்வலர்கள் மூலம் கடைகளுக்கு வண்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு கூட்டுறவு சங்க சேவைகள் மூலமாக நியாயவிலை கடைகளின் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் வாசகங்களும் வரையப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் களை இழந்து கிடந்த நியாய விலை கடைகள் தற்போது புது பொலிவுடன் காணப்படுகிறது.

Categories

Tech |