Categories
உலக செய்திகள்

14 வருடங்களுக்கு பிறகு…. திடீரென உயர்ந்த நூடுல்ஸ் விலை…. காரணம் என்ன….?

நூடுல்ஸ் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியாக உள்ளனர்.

ரஷ்யாவிற்கும் உக்கிரைனுக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் உக்ரைன் தான் கோதுமை உற்பத்தியில் முன்னணி நாடாக திகழ்கிறது. ஆனால் போரின் காரணமாக உக்ரைனைலிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலும் முடங்கியதால் கோதுமையை அடிப்படையாக தயார் செய்யப்படும் நூடுல்ஸ் விலை தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இந்த நூடுல்ஸ் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உயர்ந்துள்ளது. மேலும் ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து சீனாவிலும் கோதுமையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் நூடுல்ஸ் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |