Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு வேலை ரெடி….. பட்டதாரியிடம் ரூ.25 1/4 லட்சம் அபேஸ்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

நாடு முழுவதும் வேலை வாங்கி தருவதாக பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதாவது பட்டதாரிகளிடம் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் தனது வங்கி பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதை நம்பி பல பேர் பணத்தை அனுப்பி ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அரசியலில் உள்ளவர்களும் தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்கின்றனர். நாகர்கோவில் சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியில் 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்,நான் கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக சில இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். இந்நிலையில் டெல்லியில் செயல்படும் ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இருந்து எனது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் எதிர்முனையில் பேசிய நபர், டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள சில காலியிடங்கள் இருப்பதாகவும், இந்த வேலைக்கு உங்களை தேர்வு செய்துள்ளதாகவும் கூறினார்.மேலும் பதிவு கட்டணம், ஜிஎஸ்டி வரி, கமிஷன் கட்டணம், இயக்குனர் கட்டணம், வரி கட்டணம் என்று மொத்தம் ரூ.25,27, 700 கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து நானும் அவரது பேச்சை நம்பி பல தவணைகளாக எனது செல்போனுக்கு அந்த நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.25,27,700 அனுப்பி வைத்தேன். அதன் பிறகு நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். அப்போது அது போலியானது என்பதும் என்னிடம் பணம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. எனவே என்னிடம் பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ஏமாற்றப்பட்ட வாலிபரின் செல்போன் எனக்கு வந்த அழைப்பை ஆய்வு செய்தபோது, அது டெல்லியில் இருந்து வந்தது என்று தெரியவந்தது. அதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து டெல்லி ராம் விகார் பகுதி சேர்ந்த ராம்விகார் மகன் ஆகாஷ்(21) என்பவர் பட்டதாரி வாழிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. அதன் பிறகு போலீசார் அவரை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |