தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கிகளில் மோசடி, ஆன்லைன் மோசடி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.கரூர் அருகே உள்ள அரிகாரம் பாளையத்தைச் சேர்ந்த மாயவன் (34) என்பவர் வசித்து வருகிறார். சிவில் இன்ஜினியர் ஆன இவரது செல்போன் நம்பருக்கு வந்த குறுஞ்செய்தி லிங்கை கிளிக் செய்து பார்த்திருக்கின்றார். அதில் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை கேட்டிருக்கிறது.
இதனை அடுத்து மாயவன் தன்னுடைய ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் போன்றவற்றை பதிவு செய்திருக்கின்றார். அதன் பின் மாயவன் செல்போன் எண்ணிற்கு ஒரு ஓடிபி மெசேஜ் வந்திருக்கின்றது. இந்த நிலையில் அந்த நம்பரையும் குறுஞ்செய்தி வந்த லிங்க் உடன் மாயவன் பதிவிட்டு இருக்கின்றார். இதனை அடுத்து மாயவன் வங்கி கணக்கில் இருந்து மூன்று லட்சத்து 28 ஆயிரத்து 528 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதன் பின் தனது வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் திருடப்பட்டது பற்றி மாயவன் கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.