விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள லிகர் படத்தின் ஐஎம்டிபி ரேட்டிங் குறித்த செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் வெளியானது.
இந்த நிலையில் படத்தை பார்த்தவர்கள் விஜய்யின் நடிப்பை தவிர இதில் ஒன்றுமே இல்லை என்று கூறுகின்றார்கள். மேலும் எதிர்பார்த்த அளவிற்கு இத்திரைப்படம் இல்லை என இணையத்தில் விளாசி வருகின்றார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் ஐஎம்டிபி இணையதளத்தில் இத்திரைப்படத்திற்கு 1.7 ரேட்டிங் பாயிண்டுகள் மட்டுமே கிடைத்திருக்கின்றது. அறிமுக நடிகரான லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜெண்ட் திரைப்படத்திற்கு ஐஎம்டிபி இணையதளத்தில் 4.8 ரேட்டிங் பாய்ண்டுகளை பெற்று லிகர் படத்தை பின்னுக்கு தள்ளி இருக்கின்றது. இத்தகவலானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.