வாழ்க்கையில் வளத்தையும் செழிப்பையும் சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடிய இறைவன் வினை தீர்க்கும் விநாயகர். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைத்து வழிபட உகந்த சில பழங்களையும், மலர்களையும் பற்றிதான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். விநாயகர் நம்முடைய கஷ்டங்களையும் கர்ம வினைகளையும் கலைப்பவராகவும் இன்னல்களை தீர்ப்பவராகவும் திகழ்கிறார்.
நம்மை அனைத்து கஷ்டங்களிலிருந்து பேணிக்காத்து வெற்றியை அள்ளித்தரும் விநாயகரை வழிபட கூடிய ஒரு சிறந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மிகவும் பிடித்தமான 21 பழங்கள் மற்றும் மலர்களை வைத்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள் நீங்கி தோஷங்கள் விலகி சகல சௌபாக்கியங்களையும் பெற முடியும்.
குறிப்பாக நம்முடைய மூதாதையர்கள் மூலிகைகள், மலர்கள், கொடிகள், இலைகள், பழங்கள் என அனைத்தும் அடையாளம் கண்டு நமது ஆரோக்கியத்திற்காகவும் மன அமைதியை அதிகப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தியுள்ளனர். பிற்காலத்தில் நாம் அவற்றை மறவாமல் பயன்படுத்த கடவுளின் பெயரைக் கொண்டு சடங்குகள், பூஜைகள் போன்றவற்றை வகுத்து பயனடைய இறைவழிபாட்டை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் நாம் வழிபடக்கூடிய மிக முக்கியமான கடவுள்களில் ஒருவரான விநாயகருக்கு படைக்கப்படும் பிடித்தமான பழங்கள் மற்றும் மலர்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
21 பழங்களின் பெயர்கள்: மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், எலந்த பழம், பிறப்பம் பழம், நாவல் பழம், சாத்துக்குடி, கொய்யாப்பழம், மாதுளை, அன்னாச்சி பழம், சப்போட்டா, சீதாப்பழம், விளாம்பழம், திராட்சை, பேரிக்காய், கரும்பு, அத்திப்பழம், சோளம், உலர் பழங்கள் (பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை) கமலா ஆரஞ்சு, பேரிச்சம்பழம்.
21 மலர்களின் பெயர்கள்: மல்லி, முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, சம்பங்கி, தாமரை, செண்பகம், பாரிஜாதம், பவளமல்லி, ஆரளி, வில்வ பூ, மனோரஞ்சிதம், தும்பை பூ, எருக்கம் பூ, தாழம்பூ, மாம்பூ, செம்பருத்தி பூ, ரோஜா பூ, நந்தியாவட்டை, ஊமத்தை பூ, கொன்றை மலர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பழங்களும் மலர்களும் நமது இலக்கியங்களில் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த 21 பழங்களையும் மலர்களையும் விநாயகர் வழிபாட்டுக்கு பயன்படுத்துவதால் நமக்கு பேராற்றல் கிடைக்கும். இந்த பழங்களையும் மலர்களையும் கொண்டு விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகி நிம்மதி கிடைக்கும்