செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , இன்றைக்கு மதுரை மாநகராட்சி, மேற்கு தொகுதியில் உள்ள 74 வது வார்டில் இருக்கின்ற, சோமசுந்தர பாரதியார் பள்ளியில் 30 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொடுத்திருக்கிறோம். அது என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி, கடந்த ஆண்டு 2021-22 அந்த நிதி ஆண்டில், வருகின்ற தொகையை பள்ளிக்கு கொடுத்திருக்கிறோம். இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பு கட்டிடம் 15 லட்சம் ரூபாய், கூடுதல் வகுப்பறை 50 லட்சம் ரூபாயில், மேற்கூரை 10 லட்சம் ரூபாயிலும், சுகாதார வளாகம் 4 லட்சம் ரூபாயிலும், இதில் ஒரு பள்ளிக்கு மட்டும்…
சோமசுந்தர பாரதியார் பள்ளிக்கு மட்டும் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தனி கவனம் செலுத்தி.. இங்கே இருபாலர் படிக்கின்ற பள்ளி, மகளிர் அதிகமாக பெண் பிள்ளைகள் அதிகமாகப் படிக்கிறார்கள்.இந்த பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்ய வேண்டிய அடிப்படையில், நான் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பிறகு… கடந்த இருமுறையும் இந்த தொகுதிக்கு குறிப்பாக… சோமசுந்தர பாரதியார் பள்ளிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கிறது.
இதனால் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பார்த்தீர்கள் என்றால் 12-ம் வகுப்பு தேர்வில் மாநகராட்சியில் முதன்மை பள்ளியாக நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், அது மிகப் பெரிய பாராட்டக்கூடியது. அதற்காக உழைத்திட்ட ஆசிரியர் பெருந்தகையினர், கவனம் செலுத்திய தலைமையாசிரியர் அவர்களுக்கும் பள்ளியின் உடைய முதல்வர் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போன்று பவித்ரா, மதுரை மாநகராட்சி பள்ளியில் எடப்பாடி யார் கொண்டு வந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் 7.5% மருத்துவ கனவை நிறைவேற்றுகின்ற வகையில், 7.5% மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டதன் அடிப்படையில் சகோதரி பவித்ரா அவர்கள் இந்த பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்றார்.இன்றைக்கு தூத்துக்குடியில் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு பெருமை.
இங்கே படிக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் ஒரு நல்ல வரவேற்க கூடியது, அவர்களுக்கு முயற்சிக்கு பலனளிக்க கூடியதாக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்ல இந்த வார்டுக்கு மட்டும் அருகாமையில் சமுதாயக்கூடம் 35 லட்சம் ரூபாயில் கட்டிக் கொடுத்திருக்கிறோம் ஏழைகளுக்காக… இந்தப் பகுதியில் இருக்கின்ற பின் தங்கியவர்களெல்லாம் அதிகமாக இருக்கிறார்கள். அருகாமையில் இருக்கின்ற vao ஆபீஸ் அதுவும் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அம்மா உணவகம் கொண்டு வந்தோம்.
அருகாமையில் சமுதாயக்கூடம், இன்னொரு சமுதாயக்கூடம் திருமண கூடம் 25 லட்சம் ரூபாயில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். இப்படி சுற்றுச்சுற்று இந்த வார்டுக்கு மட்டும் பார்த்தீர்கள் என்றால் ஏறத்தாழ 8 கோடிக்கு பல்வேறு பணிகள், போர்வள அமைப்பு, தார்சாலை போடுவது, பிளாக் சாலை அமைப்பது, கட்டிடப் பணிகள் இப்படி ஏறத்தாழ 8 கோடிகளுக்கு பணிகளுக்கு செய்தது வரைக்கும், என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்திருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரையில் பழங்காநத்தம்மிகவும் தொன்மையானது. கோவலன் கொலை செய்யப்பட்ட இடமும் இங்கே தான் அருகாமையில் இருக்கிறது. பூர்வீக மதுரை எது என்றால் பழங்காநத்தம் தான். அங்குள்ள பிரசவ மருத்துவமனைக்கு 35 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கின்றேன். அதே மாதிரி அருகாமையில் ஒரு கோடி ரூபாய் செலவில் நம்முடைய மாடக்குளம் கம்மாய் இன்றைக்கு ஆழப்படுத்தப்பட்ட, அகலப்படுத்தப்பட்டு, கறையெல்லாம் வலுப்படுத்தப்பட்டு நீர் வழி சாலை எல்லாம் இன்றைக்கு புணரமைக்கப்பட்டு, எப்போது பார்த்தாலும் தண்ணீர் நிறைந்து இருக்கின்ற காட்சி.
இதன் மூலமாக இங்கிருக்கின்ற எல்லிஸ் நகர், தவிட்டு சந்தை வரைக்கும் இருக்கின்ற நிலத்தடி நீர் கூடுகிறது, பழங்காநத்தம் பகுதி. அதே போல அருகாமையில் முத்துப்பட்டி கம்மாய் இப்படி பல பகுதிகள், அது மட்டுமல்ல கம்மாய்க்கு குடிமங்கலத்திலிருந்து தண்ணீர் வருகின்றது. அங்கே தாரப்பட்டியில் ஒரு தடுப்பணை, ஏறத்தாழ 19 கோடி ரூபாயில் கட்டப்பட்டதன் மூலமாக தண்ணீர் எப்போதெல்லாம் வைகை ஆற்றில் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த பகுதியில் இருக்கின்ற மாடக்குளம் கம்மாய், அதே மாதிரி கிராமப்புறங்களில் இருக்கின்ற கம்மாய்களில் நிறைகின்ற அளவிற்கு பணிகளை செய்திருக்கிறோம் என தெரிவித்தார்.