உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் தாழ்வுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில் மதுர ரயில் நிலைய மேடையில் தாழ்வுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை அந்த வழியாக பேண்ட் சட்டை அணிந்து டிப்டாப்பாக வந்த நபர் ஒருவர் குழந்தையை அங்கிருந்து தூக்கிக்கொண்டு வேகமாக சென்றார்.
சிறிது நேரம் கழித்து தாய் எழுந்து பார்த்த போது பக்கத்தில் படுத்து இருந்த குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.குழந்தையை தூக்கிச் செல்லும் வீடியோ ரயில் பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இதனைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை திருடி சென்றவரை வலைவீசி தேடி வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
ये व्यक्ति रे०स्टेशन मथुरा जं० से अपनी माँ के साथ सो रहे महज 7 माह के बच्चे को उठाकर ले गया।
इस व्यक्ति को पकड़वाने में मदद कीजिये।
आप सिर्फ Retweet कर इसके फ़ोटो/वीडियो को Groups में share कर दीजिये, विशेष कर कासगंज, बदायूँ और बरेली साइड में।
मुझे भरोसा है ये अवश्य पकड़ा जाएगा। pic.twitter.com/fTnuGbSlsi— SACHIN KAUSHIK (@upcopsachin) August 27, 2022