Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க எந்த ஜாதியானாலும் இருங்க…! ஆனால் சாமி முன்னாடி… இதை மட்டும் செய்யுங்க… சீமான் அதிரடி கோரிக்கை …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் கேட்பது என்னவென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆனால் எந்த மொழியில் அர்ச்சனை அதுதான் முதன்மையானது. எல்லா சாதியும் முதன்மையானது தான். கர்நாடகாவில் இருந்து, கேரளாவில் இருந்து, ஆந்திராவில் இருந்து, பீகாரில் இருந்து, மத்திய பிரதேசத்திலிருந்து, உத்தரப்பிரதேசத்தில் இருந்து, பல பேர் இங்கே வந்து வாழ்கிறார்கள், அவர்கள் அவர்களுடைய குடி அடையாளத்தோடு வாழ்கிறார்கள். அப்போது அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்றால்,

நான் ஒரு சான்றுக்கு சொல்கிறேன் நான் யாதவ். இங்கே யாதவ் என்றுதான் குறிக்கப்படுகிறது என்னை பிரிப்பது இல்லை. அப்போது நான் யாதவ்வெனில் பீகாரில் இருந்து வந்த யாதவ் இங்கே இருக்கலாம், உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த யாதவும் வருவார்கள். அந்த சாதியும் அர்ச்சகர்களாகலாம் என்றால் என் இறைக்கு முன்பு எந்த மொழியில் வழிபாடு நடக்கும் இதுதான் என்னுடைய கேள்வி.

இப்போ அறநிலைத்துறையினுடைய அமைச்சராக சேகர்பாபு இருக்கிறார். அனைத்து சாதிக்கும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் திரு சேகர் பாபு அர்ச்சகர் ஆகலாம் என்றால், அவர் எந்த மொழியில் இறை வழிபாட்டை செய்வார். அப்போ எல்லாவற்றிற்கும் மேலாக முதன்மையாக இருக்கின்ற சிக்கல் அன்னை தமிழ் மொழியில் அர்ச்சனை, வழிபாடு அதுதான் எங்களுக்கு,

நீங்கள் எந்த சாதி யாராக இருங்கள் என் இறைக்கு முன்பு என் மொழியில் வழிபாடு இதுதான் எங்களுடைய கோரிக்கை, கோட்பாடு கோரிக்கை என்று சொல்ல நான் தயாராக இல்லை என் உரிமை. இது அப்போ என் வழிபாட்டில் இருந்து என் மொழியை காக்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |