கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகத்தை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 49 ஆயிரத்து 696 ரூபாயை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் நிலுவையில் உள்ள பணத்தை உடனடியாக செலுத்துமாறு அவரிடம் பலமுறை கூறியுள்ளனர். ஆனால் நடராஜன் பணம் செலுத்தவில்லை.
இதனால் நேற்று தாசில்தார் சண்முகம், மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், ரேணு, சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் நடராஜனின் கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அதன்பின்னர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.