லிபியா நாட்டில் போராளிகள் அமைப்பிற்கும் அரசாங்க படையினருக்கிடையே வன்முறை வெடித்த நிலையில், அப்பாவி பொதுமக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்ததாகவும், கலவரங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
லிபியா நாட்டில் திரிபோலி நகரத்தை தளமாக வைத்து ஐ.நா சபை அங்கீகரித்த அரசப்படையினரை, ஆதரிக்கக்கூடிய ஆயுதமேந்தே போராளிகள் மற்றும் பிரதமரின் ஃபாத்தி பாஷாகா படைகள், மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கிசூடு தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவில் நடந்த இந்த வன்முறையானது, நேற்று பகல் வரை நீடித்திருக்கிறது. இதில் 23 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சுகாதார அதிகாரிகள் வன்முறை நடந்த பகுதியிலிருந்து மக்களை வெளியேற்ற மற்றும் காயம் ஏற்பட்டவர்களுக்கு உதவி செய்ய பாதுகாப்பான பாதையை அளித்து போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், 140 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும், 64 குடும்பங்கள் வன்முறை ஏற்பட்ட பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது. இது மட்டுமல்லாமல் தலைநகரில் இருக்கும் மருத்துவ மையங்கள், மருத்துவமனைகளின் மேல் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவைக்கும் தடை விதித்தனர். இது போர் குற்றங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.