Categories
தேசிய செய்திகள்

“ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் நிறைவு”… அடுத்த வருடம் சாமி தரிசனம் செய்யலாம்…!!!!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் 5 2020 அன்று பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் கடந்த இரண்டு வருடங்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கோவிலில் கட்டுமான பணிகள் 40 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்து இருக்கின்றன. 80 சதவீதத்திற்கு அதிகமான பீடத்தின் கட்டுமான பணிகள் முடிந்திருக்கின்றது. உலகம் முழுவதிலும் வரும் பக்தர்கள் டிசம்பர் 2023 முதல் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் என கட்டுமான பணியை மேற்பார்வையிடும் ஸ்ரீராம் ஜென்ம பூமி டிரஸ்ட் பொது செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். இந்த சூழலில் ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட பணம் மற்றும் செலவுகள் பற்றி கேட்டதற்கு சம்பத்ராய்க் கூறியபோது, கடவுளுக்காக செய்யும் பணியில் பணத்திற்கு பஞ்சம் இருக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் கோவிலை சுற்றியுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் மற்றும் இடிப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பிரசித்தி பெற்ற அனுமன்கர்ஹி கோவிலுக்கு செல்லும் சாலையை விரிவுபடுத்துவதற்காக கடைகள் மற்றும் வீடுகளை இடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி கோவில் கட்டிடம் குறைந்தது ஆயிரம் வருடங்கள் நிலைத்திருக்க பூமிக்கு அடியில் மிகப்பெரிய அடித்தளம் அமைக்கப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது கோவில் பட்டறையில் ஆண்களும் பெண்கள் உட்பட பல தொழிலாளர்கள் கற்களை செதுக்கி மெருகூட்டுவதை காண முடிகின்றது அயோத்தி வரும் பக்தர்கள் அங்கு சென்று கட்டுமான பணிகளை மேற்பார்வை விட்டு செல்கின்றார்கள்.

Categories

Tech |