மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் துளசிராமன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று கொசப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அருணகிரி சத்திரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது துளசிராமனின் மோட்டார் சைக்கிள் திடீரென சாலையில் உள்ள பள்ளத்தில் ஏறி இறங்கியது.
இதில் நிலைத்திடுமாறி கீழே விழுந்த துளசிராமன் மீது அவ்வழியாக வந்த டிராக்டர் மோதியுள்ளது. இதில் தலை நசுங்கி துளசிராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துளசிராமனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் ஓட்டுநரான வெங்கடேசன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.