முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சாதாரண பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போதெல்லாம் பரிந்துரை செய்த டி.டிவி.தினகரனை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த பன்னீர்செல்வம் அவர் மீது அபாண்ட பழி சுமத்தினார்.
முதல்-அமைச்சர் பதவி மீது அவர் கொண்ட ஆசையில் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர்தான் பன்னீர்செல்வம். அவர் மீண்டும் சசிகலாவை சந்திப்பேன் என்று கூறுகிறார். இதை கேட்டு சிரிப்பதா? அழுவதா? என்பது தெரியவில்லை. மகாராணிபோல் வாழ்ந்த சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கியவர் பன்னீர்செல்வம் தான்.