இரண்டாம் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு பதிவு மூலம் இன்ஸ்டாவில் பதில் அளித்துள்ளார் மேக்னா ராஜ்.
கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். சென்ற 2020 ஆம் வருடம் ஜூன் 7-ம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த நடிகை மேக்னா ராஜ் அதிலிருந்து மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்த சூழலில் 32 வயதான நடிகை மேக்னோராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். பின் இவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அதனை மறுத்தார். தற்பொழுது இது வேகமாக பரவி வந்த நிலையில் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் மற்றும் மகன் பெயரை ஒன்றாக சேர்த்து அவர் தனது கையில் டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். இதன் மூலம் சென்ற சில நாட்களாக இரண்டாம் திருமணம் குறித்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
https://www.instagram.com/p/ChtVhBbLte8/?utm_source=ig_embed&ig_rid=43f7edea-788d-42a6-bae8-eda807efe10a