அய்யன்கொல்லி-கூடலூர் இடையே குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து தேவாலா, பந்தலூர், கொலப்பள்ளி வழியாக அய்யன்கொல்லி, நம்பியார் குன்னூர், பந்தலூர், முக்கட்டி வழியாக நெலாக்கோட்டை, பிதிர்காடு வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயணித்து வருகின்றார்கள்.
இதனிடையே போதுமான அளவு பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் உரிய நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். கூடலூருக்கு குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றார்கள்.
இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது. கூடலூர் அரசு பேருந்துக்கு போதுமானளவு நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இல்லாத காரணத்தினால் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆகையால் இவ்வழியாக கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.