ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்க தனது படைகள் அனைத்தையும் முழுவதுமாக விளக்கிக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகமது ஹசன் தலைமையில் தலிபான்கள் இடைக்கால அரசு அமைத்திருக்கின்றார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலையில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வீடுவீடாக சென்று அங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன தலிபான்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. குண்டுஸ் மாகாணத்தில் உள்ள உள்ளூர் வாக்குகளின் கூற்றுப்படி பாதுகாப்பு படையினர் நகரம் மற்றும் மாகாணத்தின் சில மாவட்டங்களில் வீடு வீடாக சென்று சோதனைகளை தொடங்கி இருக்கின்றார்கள்.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் திடீர் ட்ரோன் தாக்குதல் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் முக்கிய கூட்டம் ஜவாஹரி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சோதனை அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இந்த சோதனைகளை நோக்கம் சட்டவிரோத உபகரணங்களை சேகரிப்பது என தலைப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாங்கள் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் மருந்துகளை கண்டுபிடித்து இருக்கின்றோம். இது குண்டூஸ் மாகாணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து மறைந்து போக வேண்டும். இதற்கு பதிலாக மக்கள் வேலை செய்ய தொடங்க வேண்டும். மேலும் பேனாவை பயன்படுத்த வேண்டும் தங்கள் குழந்தைகளை கல்விக்கு வழிநடத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா விட்டு சென்றுள்ளதும் அது இறுதியில் தலிபான்களின் கைகளில் வந்து சேர்ந்திருக்கின்றது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த ஆயுதங்கள் மற்றும் ராணுவ பாகங்கள் ஆப்கானிய துப்பாக்கி வியாபாரிகளால் கடைகளில் வெளிப்படையாக வர்த்தகம் செய்யப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் ராணுவ தளங்களில் இருந்தும் ஆப்கானிஸ்தான் அரசு விரதம் மற்றும் தலிபான் போர்களிடமிருந்தும் கடத்தல்காரர்கள் ஆயுதங்களை வாங்கி அவற்றை சேகரித்து வருகின்றார்கள். இந்த சூழலில் இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியின பகுதிகளில் உள்ள ஆயுத சந்தைகளில் விற்கப்படுகின்றது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் ஆயுதங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்று செல்லும் நாடுகளில் பாகிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றது. சர்வதேச போதை மருந்து சந்தைகளுக்கு அபின் விநியோகத்தின் பிரதான ஆதாரமாக ஆப்கானிஸ்தான் விளங்குகின்றது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச சந்தைகளை அபின் சென்றடைய போதை பொருள் நெட்வொர்க் செயல்படும் போக்குவரத்து மையமாக பாகிஸ்தான் இருக்கிறது அங்கிருந்து பல வழிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.