அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியதில் செவிலியர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே இருக்கும் கொலக்கொம்பை பகுதி சேர்ந்த மருதை என்பவரின் மகள் மதுமதி. இவர் தனது மாமா மகேந்திரன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் ஒரு வருடமாக செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மகேந்திரன் மற்றும் அவரின் மனைவி இளவரசி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக மொபட்டில் சென்று விட்டு பின் மீண்டும் மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இதனிடையே அதிகாலை 4.45 மணியளவில் திருச்சி-சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டின் பின் வேகமாக வந்த அடையாளம் தெரியாதா வாகனம் மொபட்டின் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் மதுமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்பொழுது மகேந்திரன் மற்றும் இளவரசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.