இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் இதில் கட்டணமும் குறைவு தான் சௌகரியமாகவும் பயணம் செய்யலாம் என்பதால். மேலும்ரயில்வே துறையானது பயணிகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. கஜுராஹோவில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்குவதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு 25 முக்கிய நகரங்களை இணைக்கும் திட்டத்தை உருவாக்கியது. தற்போது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.அதன்படி சென்னையில் இருந்து சண்டிகருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது . இந்த ரயில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது.நாடு முழுவதும் இந்த ரயில்கள் இயக்கப்பட்டால் பயண நேரம் குறையும் என்று கூறப்படுகிறது.