இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் என்பது மிக அவசியமான ஒன்று. இது குறித்து பதிவு செய்ய அந்தந்த நகர பஞ்சாயத்து அலுவலகத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்தால் அரசின் சலுகைகளை பெறலாம்.தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு பிறப்பும் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இறப்பு 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அரசின் எந்த ஒரு சலுகை மற்றும் நலன்களை அவர்கள் பெற முடியாது.
இன்றைய காலகட்டத்தில் அனைத்து சேவைகளுமே ஆன்லைன் மூலம் தான் நடைபெற்று வருகின்றன. அதாவது அரசால் வழங்கப்படும் ஆதார்,வாக்காளர் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்கள் அனைத்தும் தற்போது இணையதளம் மூலமாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மக்கள் எளிதில் குறுகிய காலத்தில் தேவையான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதன்படி தற்போது பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இலவசமாக இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு மட்டும் நடப்பு ஆண்டுக்கான மருத்துவமனை மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்புகள் அனைத்தும் மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதனால் பொதுமக்கள் இந்த சான்றிதழ்களை இலவசமாக இணையதளம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் எனவும் எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.