Categories
தேசிய செய்திகள்

45 வகையான மருந்துகளின் விலையில் அதிரடி மாற்றம்…. புதிய ரேட் இதுதான்…. அரசு முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் மருந்து பொருள்களின் காப்புரிமை காலாவதியாக உள்ளது.அதனால் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை 2013ன் படி சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 45 வகையான மருந்துகளின் சில்லறை விலையை மாற்றியுள்ளது.

அதன்படி சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஜலதோஷம், நோய் தொற்றுகள், கண் தொடர்பான நோய்கள் மற்றும் அதிக கொழுப்பு மாத்திரை விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே ட்ரை கிளிசரைடு அளவை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் சிடா கிளிப்பிங் மெட் போர்மின் ஹைட்ரோ குளோரைடு மற்றும் லினா கிளிப் இன்,மெட் பாமின் ஆகியவற்றின் கலவையின் ஒரு மாத்திரையின் விலை 16 ரூபாய் முதல் 21 ரூபாய் வரை குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அலர்ஜி மற்றும் சளி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் பாராசிட்டமல், பினைல் பிறைன், ஹைட்ரோ குளோரைடு ஆகியவற்றின் விலை 3.73 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபயோடிக் மருந்தாக பயன்படுத்தும் மருந்துகளின் விலை 163.43 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |