இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். ATM மையங்களிலும் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் ATMக்கு வரும் முதியவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாசர்பாடியைச், சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ATMல் பணம் எடுக்க வந்த அவரிடம் பணம் எடுத்து தருவதுபோல் உதவி, அவரது கார்டுக்கு பதிலாக வேறொரு கார்டை கொடுத்து அவர்கள் ≈1,15,000 பணம் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மோசடி செய்யப்பட்டுள்ளதாக, புகார் அளித்துள்ளார்.