நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் பரவி நாட்டையே உலுக்கியது. இது மறக்க முடியாத ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு ஓமைக்ரான் பரவலும் பரவத் தொடங்கியது. இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதுபோன்று நோய்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கியது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்பாக்கியம் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன், முதல்வர் வில்சன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு கல்லூரி அனைத்து மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜோகன்னா, ஜெயா டேவிசன் இம்மானுவேல் மற்றும் ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் ஜூலியன் ராஜாசிங் ஆகியோய் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.