சீனா வங்கிகளிடம் இலங்கை அதிக அளவு கடன் பெற்றுள்ளதால் அந்த நாடு வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சீனாவுக்கு ரூ.11,850 கோடி முதல் 15,800 கோடி வரை கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டியுள்ளதாக உள்ளது. அதே நேரத்தில் இலங்கை சீனா முதலீடாகவும் கடனாகவும் மொத்தம் ரூ.63,200 கோடியை வழங்கியிருக்கிறது.
இந்த கடனை திருப்பி செலுத்த காலத்தை மாற்றி அமைக்கும் படி சீனாவிடம் இலங்கை கோரிக்கை வைத்து வருகிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியது, கடன் விவகாரத்தில் முடிவு எடுப்பது இலங்கை அரசிடம் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது .