உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் எமரால்ட் கோர்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் சட்டவிரதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த இரு கட்டிடங்களையும் இடித்து தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. இதனையடுத்து மும்பையை சேர்ந்த எடிபைஸ் சென்ற நிறுவனம் கட்டிடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டது. பாதுகாப்பு கருதி சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் 5 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களின் வீடுகளில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகள், தெருநாய்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பிராணிகளும், 3000 வாகனங்களும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு கட்டிடம் இடிக்கும் முன் தொடங்கியது. கட்டிடத்திற்குள் அனைத்தும் மாடியிலும் 7,000 இடங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.3500 கோடி வெடிமருந்து பொருட்களும் ஒரே சமயத்தில் வெடிக்கப்பட, 12 நொடியில் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. அதன் பிறகு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் எந்த கட்டிடத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால் காற்று மாசு காரணமாக வீட்டிற்குள் மாஸ் அணிந்திருக்கும் படி அறிவித்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த கட்டிடத்தில் தற்போதைய மதிப்பு ரூ.700 கோடி. இந்த கட்டிடம் இடிக்கப்பட்டதால் சூப்பர் டெக் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.